Posts

Showing posts from May, 2026

திருமூலநாதன் - நினைவுக் கலை

ஒவ்வொரு நாளும் பணி சார்ந்த காரணங்களுக்காவும் பொழுதுபோக்குக்காகவும் நிறைய வாசிக்கிறோம், ஒலிக்கோப்புகளாகக் கேட்கிறோம். நாம் வாட்ஸ்அப்பில் தினமும் வாசிக்கும் செய்திகளும் பார்க்கும் காணொலிகளுமே மிக அதிகம். ஆனால் அவற்றில் அனேகமாக எதுவுமே நம் நினைவில் தங்குவதில்லை. பெருமுயற்சி செய்து நாம் வாசிப்பவை கூட நம் நினைவில் இருப்பதில்லை. வாசிப்பதையும் பார்ப்பதையும் கேட்பதையும் நீண்ட காலம் நினைவில் கொள்வது எப்படி? அதற்காக நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன? இது குறித்த ஓர் உரை.

போகன் - Intellectual poetry.

கவிதை(Poetics) எப்போதும் அழகியலோடு(Aesthetics )தொடர்பு படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. அறிவை விட உணர்ச்சிக்கும்(emotions)உள்ளுணர்வுக்கும் (Intuition ) இடமாகவே கவிதை கருதப்பட்டு வந்திருக்கின்றது. பல நேரங்களில் கவிதை தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தாலும் ( கவிதை சரித்திரத்தை விட உயர்வானது ஏனெனில் சரித்திரம் குறிப்பிட்ட விஷயங்களை (particulars)பற்றி மட்டுமே பேசுகிறது கவிதையோ உலகளாவிய(universal )விஷயங்களைப் பேசுகிறது -அரிஸ்டாட்டில் ) கவிதை ஒருபோதும் அறிவை நோக்கியோ தத்துவத்தை நோக்கியோ செல்லும் ஒரு விஷயமாக கருதப்பட்டதில்லை. மனித அல்லது உலகாயத அறிவை எப்போதும் தீமையுடனும் சாத்தானுடனும் தொடர்புபடுத்தி சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த செமிட்டிக் மத மற்றும் கிறிஸ்தவ மரபின் வலுவான கரங்களின் பிடியில் நீண்ட காலமாக இலக்கியமும் கவிதையும் இருந்ததின் விளைவு இது. இந்த காலகட்டத்தில் கவிதை எப்போதும் கடவுளை நோக்கியும் நன்மையை நோக்கியும் அழகை நோக்கியும் அமைதியை நோக்கியுமே திரும்பி இருந்தது. கிரேக்க காவிய காலகட்டத்திற்குப் பிறகு வந்த தாந்தே, மில்டன் போன்றவர்கள் கவிதைக்குள் தத்துவத்தை கொண்டுவர முயன்றாலும்...

எம் கோபாலகிருஷ்ணன் - ஆய்வும் புனைவும்

  அறியப்பட்ட வரலாறு தகவல்களால் கட்டமைக்கப்பட்டது. சான்றுகள், குறிப்புகள், கடிதங்கள் போன்ற எண்ணற்ற ஆவணங்களில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களே நிலத்தின், மக்களின் வரலாறாக எழுதப்படுகின்றன. புனைவுகளும் அவ்வாறான தகவல்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. தொகுக்கப்பட்ட தகவல்களையும் ஆவணங்களையும் புனைவில் கையாள்வதில் உள்ள சவால்கள் என்ன? ஒரு ஆய்வேட்டையும், புனைவையும் வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சம் எது?  ஆய்வுக்கும் புனைவுக்குமான தொடர்பையும் வித்தியாசத்தையும் தமிழில் எழுதப்பட்ட சில நாவல்களின் அடிப்படையில் உரையாடுவதே இந்த அமர்வின் நோக்கம்.

Vikram Hathwar - Craziness of Shivaram Karanth

Vikram Hathwar was born in 1982 in a small village called Beejadi in the Kundapura taluk. His life blossomed amidst the alleys of Shivajinagar, the rhythmic beats of the Chande in coastal Yakshagana, and the lap of the Tunga River in Thirthahalli. He has travelled and lived across cities like Bengaluru, Kushalnagar, Thiruvananthapuram, Mumbai, New York, and London. By profession, he is a software engineer. He has 4 Poetry Collections, 3 Short Story Collections, and 2 Essay Collections published. Interests and Achievements He is deeply interested in cultural discourse, literary criticism, philosophy, music, and cinema. He has delivered lectures at various seminars and forums. Additionally, he has written the story, screenplay, and dialogues for Kannada feature films. He is also actively involved in book publishing through his publishing house, 'Prakruthi' Prakashana . He was awarded the Kendra Sahitya Akademi Yuva Puraskar for his short story collection 'Zero and One' ...

சிவ பிரசாத் - இசையும் இலக்கியமும்

  கடந்த பத்தாண்டுகளில் வெளியான இசை சார்ந்த சில கதைகள். தமிழ் இலக்கியத்தில் இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கும் எப்போதுமே ஒரு தனித்துவமான இடம் உண்டு. மௌனி, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி யுவன் சந்திரசேகர் வரை இசை சார்ந்த கதைகளுக்கான ஒரு வலுவானத் தொடர்ச்சி நம்மிடம் இருந்துள்ளது. நாம் கொண்டாடும் நவீன படைப்பாளிகள் அனைவருமே, குறைந்தபட்சம் ஒரு படைப்பிலாவது தாங்கள் நேசிக்கும் இசை குறித்தோ அல்லது இசைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்வு குறித்தோ பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 2016 முதல் 2026 வரையான இந்தப் பத்தாண்டுகளில், இசை சார்ந்தும் இசைக்கலைஞர்களை மையமிட்டும் எழுதப்பட்ட சில முக்கியமான கதைகள் குறித்து விவாதிப்பதே எனது இந்த உரையின் நோக்கம். இசை ஒரு கலையாகவும், அதே சமயம் ஒரு வாழ்வியல் நெருக்கடியாகவும் நவீனப் புனைவுகளில் எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்பதை இங்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். வாசிப்பு பகுதி: உஸ்தாத் - சுகுமாரன் https://akazhonline.com/?p=8192 ஆசிர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன் https://vallinam.com.my/version2/?p=10077 பாகேஸ்ரீ - எஸ் சுரேஷ் https://padh...

அமுதா - இலக்கியத்தில் தத்துவ நோக்கு

வாழ்வில் எழும் அடிப்படை வினாக்களை தர்க்கம் மூலம் எதிர்கொண்டு விடை தேடுவது தத்துவம் என விரிகிறது. அதே  அடிப்படை வினாக்களை உள்ளுணர்வு சார்ந்து கற்பனையின் துணை கொண்டு எதிர்கொள்ளும் தேடலே இலக்கியமாக மலர்கிறது. இலக்கியங்களில் வெளிப்படும் தத்துவ பார்வைகள் பற்றிய ஒரு சிறு அலசல். சில திருக்குறள்கள் மற்றும் ஒரு சிறுகதை பற்றி பேசலாம். வாசிப்பிற்கானவை:  1. திருக்குறள்கள்     1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா          செய்தொழில் வேற்றுமையான்      2) மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ் இருந்தும்          கீழ் அல்லர் கீழ் அல்லவர்              3) அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்         புறத்த புகழும் இல             4) அறத்தாறிதுவென வேண்டா சிவிகை           பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை              5) நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  ...

நிகழ்ச்சி நிரல்

வாசிப்பு பகுதிகள் மற்றும் அரங்கு நடத்துவோரின் குறிப்பை அறிந்து கொள்ள அரங்குகளின் தலைப்பின் மீது சொடுக்கவும் வ. எண் அமர்வு தலைப்பு நேரம் 22.06.26: (வெள்ளி) Sessions starts at 10:30 AM 1 ஜா ராஜகோபாலன் கம்ப இராமாயணமும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் காலை 10:30 - 11:30 தேநீர் இடைவேளை – 11:30 – 12:00 2 லக்ஷ்மி நாராயணன் கலிங்கத்துப்பரணி காலை 12:00 - 12:45 3 சரண்யா தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும் மதியம் 12:45 - 1:30 மதிய இடைவேளை – 1:30 – 4:00 4 சபரீஷ் இவ்வாறு நான் வாசகனானேன் மாலை 4:00 - 4:45 5 சிவ கிஷோர் கற்பதிந்த இலக்கியங்கள் மாலை 4:45 - 5:15 மாலை /தேநீர் இடைவேளை – 5:15 – 7:00 6 M.கோபால் ஆய்வும் புனைவும் இரவு 7:00 – 7:45 7 ஈஸ்வரி குறுந்தொகையில் மலர்கள் இரவு 7:45 – 8:30 8 ப்ரீத்தி இலக்கியத்தில் தனிமை இரவு 8:30 - 9:15 23.06.26: (சனி) Sessions starts at 9:30 AM 9 அகரமுதல்வன் ஈழத்து புலம்பெயர் எழுத்தும் பண்பும் காலை 9:30 - 10:15 10 சீனு பயண இலக்கியம் காலை 10:15 - 11:15 தேநீர் இடைவேளை – 11:15 – 11:45 11 அமுதா இலக்கியத்தில் தத்துவ நோக்கு காலை...

லக்ஷ்மி நாராயணன் - கலிங்கத்துப்பரணி

 கலிங்கத்துப் பரணியில் போர் அழகியல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணியில் முதன்மையானதாக கருதப்படும் கலிங்கத்துப்பரணி குறித்த எளிய அறிமுகமாக இவ்வுரை அமையலாம். கலிங்கத்துப் பரணியில் பயின்று வரும் போர்ச்சித்திர அணிகள், குறிப்பாக மிகை அணிகளின் அழகியல் குறித்த தேடலாக இவ்வுரை இருக்கும்.  போர் பாடியது, களம் பாடியது ஆகிய இரண்டு பகுதிகள், இதற்கென எடுத்துக்கொள்ளப்படும். வாசிப்பு பகுதி: https://drive.google.com/file/d/1IOupRmvgaGVZTWaVEFm4ZwXhtm0tbnXv/view?usp=drive_link

நாமக்கல் சங்கர் - கவிதையை அடைதல்

 கவிதை அமைவதென்றாலும் அதை முயன்று அடைவதற்கான தவிப்பு அல்லது அவசியம் கவிதை எழுதுபவனுக்கு உருவாகிறது. கவிதை, தான் உருவாகி வந்ததும் இதே தவிப்பை வாசகனுக்கும் ஏற்படுத்துகிறது. கவிதையை அடைவதற்கான முயற்சியும் அது அமையும் தருணமும் நிகழ்ந்தபடியே இருக்கும் ஒரு மர்மமான வழிமுறையே (process) கவிதை என்று சுட்டுவதில் தவறில்லை.  1. கழுதையும் குதிரையும் - கல்பற்றா நாராயணன் https://akazhonline.com/?p=9033 2. பசுவய்யா கவிதைகள்: --- கன்னியாகுமரியில் --- சூரியாஸ்தமனத்தை மறைத்தது ஒரு ஆட்டுக்குட்டி. என்றும் மேகங்கள் இன்று இது. எனது கோணத்தை சற்றே நான் மாற்றிக் கொண்டால் லாபம் ஒரு சூரியன்.  கோணமா? சூரியனா? சிந்தனையில் நழுவி,  வெளிப் பார்வை இழந்து அறுபட்டு விழித்துக் திடுக்கிட்டதும்,  நகர்ந்தோடியிருந்தது அசட்டு ஆட்டுக்குட்டி சூரியனைக் காணோம்.  (பிரக்ஞை, ஏப்ரல் 75)  --- கன்னியாகுமரியில் --- இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம்.  மிகப்பெரிய சூரியன்.  ஒரே ரத்தக் கலங்கல்.  எங்கிருந்தோ வந்து சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது இந்த ஆட்டுக்குட்டி.  அசடு அபேதம் தன்னிலை அறியாதது....

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்

 Saaranya's note: தேவிபாரதி படைப்புகளில் வஞ்சம், பழி, சாபம் என்ற உணர்வுகள் அதீதமாக வெளிப்பட்டன. போதும் இந்த வஞ்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாப்பாத்திரங்கள் தங்கள் வாழ்நாள் முழுதும்  வஞ்சத்தை சுமந்து அலைந்தனர். சொந்த வாழ்வை அழித்துக்கொண்டு தருணம் பார்த்துப் பழி தீர்த்துக் கொண்டனர். சிலர் மட்டுமே வஞ்சத்தை சுமந்து அலைய எல்லா காரணங்கள் இருந்தும் அதற்கு இரை ஆகாமல் இருந்தனர். மன்னிப்பு நோக்கி நகர்ந்தவர்கள் யார், நகர விரும்பாதவர்களை எது தடுத்தது, யார் எதை விட்டுச் சென்றார்கள் என்ற கோணத்தில் அமர்வில் பேசலாம். வாசிப்பு பகுதிகள்: நொய்யல், நிழலின் தனிமை, நீர் வழிப்படூஉம், பிறகொரு இரவு ஆகியவற்றை வாசித்து இருந்தால் நல்லது. விவாதிக்க சில பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம், நொய்யல் - குமரப்ப பண்டிதர்:  நாசுவ குடியில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே தன் குலத்தொழில் செய்ய விரும்பவில்லை. சிறுவயதில் ஒரு பயணத்தில் வழி தவறி மலைகளில் தங்கி இருந்த சித்தர் இடத்தில் ஜோதிடமும் மருத்துவமும் பயின்றவர். ஊருக்கு திரும்பி வந்து கோவிலில் பிச்சை எடுத்து அங்கு வருபவர்களுக்கு மருத்துவமும் ஜோதிடமும் பார்த்து வந்...

விஜயபாரதி - இலக்கியத்தில் பறவை வர்ணனைகள்

Image
முன்னுரை மரபிலக்கியத்திலும் , நவீன இலக்கியத்திலும் நிறைய பறவைகள் பற்றிய குறிப்புகள் வாசிக்க கிடைக்கன்றன. சில படிமமாக வந்து செல்பவை , சில உருவகமாக வளர்ந்து நிற்பவை. அத்தகைய பறவைகளை காட்சியாக, காணொலியாக அணுகிய அறியும் அமர்வு. அமர்வுக்கு படிக்க வேண்டியவை: அன்றில்  நெருப்பி னன்ன செந்தலை யன்றில்       இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு   தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்   கையற நரலு நள்ளென் யாமத்துப்   பெருந்தண் வாடையும் வாரார்   இஃதோ தோழிநங் காதலர் வரைவே.  Reference: https://tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=160   செங்கால் நாரை - நாரை விடு தூது - சத்திமுத்தப்புலவர் நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலி...