சுசித்ரா - இருத்தலியலுக்கு மேல் உள்ள இருப்பு


‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில் இவான் பேசப்படும் அளவுக்கு அல்யோஷா பேசப்படுவதில்லை. இருபதாம் நூற்றாண்டில் உருவான இருத்தலியல் சிந்தனைக்கு இவானின் Grand Inquisitor கதை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. எப்போதும் ஒரு விரிவான தத்துவப்புலத்தின் பின்னணியில் இவானின் கதாபாத்திரம் பேசப்பட்டு வருகிறது.  ஒப்புநோக்க அல்யோஷாவின் தேடலும், இவானின் உரையாடலும் ஜோசிமாவின் இறப்பையும் கடந்து அவன் அடையும் தரிசனமும், தத்துவச்செழுமையுடன் பேசப்பட்டதில்லை. 


இவ்வரங்கில், ‘கரமசோவ் சகோதரர்களில்’ அல்யோஷாவின் தரிசனம் வெளிப்படும் பகுதியிலிருந்து தொடங்கி, அத்தரிசனைத்துக்கு நெருக்கமாக பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த தத்துவச் சிந்தனைகள் சிலவற்றை பற்றிப் பேசவிருக்கிறேன். 


வாசகர்கள் கரமசோவ் சகோதரர்களின் ஏழாம் பகுதியான 'அல்யோஷா'-வின் இறுதி இரண்டு அத்தியானங்களை மட்டும் தங்களுக்கு விருப்பமுள்ள மொழியாக்கத்தில் வாசித்து வரலாம். விவாதம் நாவலில் தொடங்கினாலும் இருத்தலியலைத் தாண்டிய இருப்பு என்பதே மையம். அதை ஏற்றோ மறுத்தோ நாவலிலிருந்தும் வெளியிலிருந்தும் விவாதிக்கலாம்.


வாசிப்பு பகுதி:

அல்யோஷாவின் இறுதி இரண்டு அத்தியாயங்கள்

https://drive.google.com/file/d/1IeiUqvOVIiEvULAPZvPth1TCxK5rKKpk/view?usp=sharing


விருப்பமுள்ளவர்கள் மேலதிகமாக வாசிக்க:

சிமோன் வெயில் - Forms of the implicit love of god

https://drive.google.com/file/d/1X_3byvkW0RfXDPg_034cUCiyOqLnJjTc/view?usp=drive_link


https://www.theatlantic.com/magazine/archive/1959/12/the-wine-of-the-tetrarch/640791/

Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

கடலூர் சீனு - பயண இலக்கியம்

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்