விஜயபாரதி - இலக்கியத்தில் பறவை வர்ணனைகள்
முன்னுரை
மரபிலக்கியத்திலும் , நவீன இலக்கியத்திலும் நிறைய பறவைகள் பற்றிய குறிப்புகள் வாசிக்க கிடைக்கன்றன. சில படிமமாக வந்து செல்பவை , சில உருவகமாக வளர்ந்து நிற்பவை. அத்தகைய பறவைகளை காட்சியாக, காணொலியாக அணுகிய அறியும் அமர்வு.
அமர்வுக்கு படிக்க வேண்டியவை:
அன்றில்
நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரைவே.
Reference: https://tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=160
செங்கால் நாரை - நாரை விடு தூது - சத்திமுத்தப்புலவர்
நாராய்! நாராய்! செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் !
நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.
குருகு
“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
https://www.jeyamohan.in/16748/
ஆனைச்சாத்தன் - ஆண்டாள் பாசுரம்
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்!
சிறுபாணாற்றுப்படை - தேன்சிட்டு
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து,
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண் பணை
https://www.tamilvu.org/library/l1100/html/l1130ind.htm
சிரல் - மீன்கொத்தி
சிறுபாணாற்றுப்படை - 180
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து,
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
அகநானூறு -106 (ஆலங்குடி வங்கனார்)
எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன்
வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந்
துறைகே ழூரன்
குறும்பூழ் - செம்பூழ் - காடை - அகநானூறு (63)
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
''வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்?'' எனக் கலுழும் என் நெஞ்சே.
குக்கில்
குக்கில் - களவழி 5
தெரிகணை எஃகம் திறந்தவாய் எல்லாம்
குருதி படிந்துண்ட காகம்- உருவிழந்து
குக்கில் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியார் அட்ட களத்து
கணந்துள்
அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.
நற்றிணை 212, குடவாயிற் கீரத்தனார்
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்,
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்,
கடுங்குரல் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங்குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர், வாழி தோழி, கையதை
செம்பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.
பறவைகள் பார்த்தல்
குறுங்காட்டில் மாலையில் பறவைகளைப் பார்ப்பதற்காக துரோணர் அனைவரையும் அழைத்துச்சென்றிருந்தார். புதர்களுக்குள் அமர்ந்து ஓசையும் அசைவும் இன்றி பறவைகளை கூர்ந்து நோக்கும்படி சொன்னார். “வந்தமர்தல், எழுந்துசெல்லல், சமன்செய்து அமர்ந்திருத்தல், நேர்படப்பறத்தல், விழுதல், எழுதல், வளைதல், மிதந்துநிற்றல், காற்றில் பாய்தல், வட்டமிடுதல், சிறகு குலைத்து காற்றை எதிர்கொள்ளல், உறவாடல் என்னும் பன்னிரு அசைவுகளால் ஆனது பறவை. ஒவ்வொரு பறவையும் அதன் எடைக்கும் வடிவுக்கும் ஏற்ப ஒவ்வொரு அசைவையும் அடைந்துள்ளது” ஒரு பறவை எழுந்து மறைந்தபின் மெல்லிய குரலில் துரோணர் சொன்னார். “ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக உற்றுநோக்குங்கள். பறவையை ஓர் அம்பு என்று பார்ப்பதும் அம்பை ஒரு பறவை என்று பார்ப்பதும் தனுர்வேதத்தின் கற்றல்முறையாகும்.”
https://venmurasu.in/vannakkadal/chapter-46/
நீலம் - கரிச்சான் , நீர்க்காகம், மரகதப்புறா, நாகணவாய்
‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.
‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்.
சோலைக்குள் பல்லாயிரம் பறவைச்சிறகுகள் முதல்துடிப்பைப் பெற்றன. பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை.
‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே!’ என்றது நாகணவாய்க்கூட்டம். சோலையின் மேல் விரிந்த வானில் மேகங்கள் நாணத்தின் ஒளி கொண்டன. உச்சிமரங்களின் நுனித்தளிர்கள் முதல் அமுதத்துளி உண்டு ததும்பி முறுக்கவிழ்ந்தன. பறவைச்சிறகுகள் தாங்கள் மேகங்களால் ஆனவை என்றறிந்து கொள்ளும் பெருங்கணம்.
‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன. சொடுக்கிய நீள்கழுத்துக்களில் மின்னிமறைந்த பசுநீல மணிவெளிச்சம் அக்காட்சியை தான் அறிந்திருந்தது.
https://venmurasu.in/neelam/chapter-1/
சாதகப்பறவை
“சாதகப்பறவைகள் பெருங்காதல்கொண்டவை. பெண்பறவை மரப்பொந்தில் முட்டைகளைப்போட்டுக்கொண்டு உள்ளேயே அமர்ந்துவிடும். தந்தை தன் வாயிலிருந்து வரும் பசையால் அந்த மரப்பொந்தைமூடும். சிறிய துளைவழியாக உணவை உள்ளே கொண்டு ஊட்டும். குஞ்சுகள் விரிந்து வெளிவந்து பறக்கத்தொடங்குவது வரை அன்னையும் குஞ்சுகளும் தந்தையால் பேணப்படும்” என்றான் பாண்டு.
https://venmurasu.in/mazhaippadal/88
தூக்கணாங்குருவி - Word for Birds - Salim Ali
A few years ago I had a building colony of Baya Weaver birds under close and regular observation for several months running. To get on a level with the babool tree on which the nests hung, I rigged up a raised platform on which I spent several hours each day with camera , binoculars, and notebook concealed behind a screen of leaves and branches. In a short time the birds became perfectly accustomed to this weird contraption almost in their midst. They worked at their ease and paid not the slightest attention to me, perched only a few feet away, even when from time to time there were mysterious clattering sounds from within as the Reflex shutter was released and the slides changed. I remember this particular occasion because of a question it forcibly thrust on my mind - the question as to whether birds possess a Conscience, and what is in reality the thing that we call Conscience. I noted down the various incidents almost as they occurred.
While the owner of a half built nest was away with a party of fellow builders to procure fresh grass strips from a field of young paddy plants close by, I observed his neighbour , who had stayed behind, surreptitiously hop across to the unattended nest and tug feverishly at two or three of the interwoven strands. Presently he works them into the fabric of his own nest. I soon discovered that this was the only laggard in this industrious colony. He seldom flew out with the others to get his own nesting material, and he was in fact , an habitual offender. Whether it was the Little Inner Voice, or whether it was the memory of some unsavoury past experience I cannot tell, but the pilfering bird certainly showed every evidence of guilt and sheepishness in his actions. His hurried pulls, his furtive glances around, and his hasty departure before the return of the supply column all evinced plainly that the bird was fully aware that what it was doing is Not Done. When making our customs declarations for instance it is fear of consequences if caught out , or is it , as we smugly imagine, a Righteous Conscience that guides our pen?
I was eye-witness to this pilferer’s shady practices again and again. It was also clear to me that the rightful owner never ceased to suspect his neighbour. He had not failed to mark on his return that his nest had been mauled about. More than once I had seen him cast accusing glances at his neighbour who continued to work on in pretended innocence and complacency. He must surely also have noticed that the material the suspect was using was browned by exposure ,and not fresh and green like that procured directly from the fields. But although the circumstantial evidence was perhaps damning enough to convict No2. in court of law, the injured party took no action beyond looking distinctly aggrieved. Only on one occasion, soon after, when he returned rather unexpectedly to the scene and caught the robber red-handed, was there plying of bills, flying of feathers while the culprit screamed blue murder and fluttered piteously.
My joy and satisfaction were undisguised. No 2’s Conscience had had a rude awakening , and for the rest of my vigil that day, he behaved with the utmost respectability.













Comments
Post a Comment