நாமக்கல் சங்கர் - கவிதையை அடைதல்
கவிதை அமைவதென்றாலும் அதை முயன்று அடைவதற்கான தவிப்பு அல்லது அவசியம் கவிதை எழுதுபவனுக்கு உருவாகிறது. கவிதை, தான் உருவாகி வந்ததும் இதே தவிப்பை வாசகனுக்கும் ஏற்படுத்துகிறது. கவிதையை அடைவதற்கான முயற்சியும் அது அமையும் தருணமும் நிகழ்ந்தபடியே இருக்கும் ஒரு மர்மமான வழிமுறையே (process) கவிதை என்று சுட்டுவதில் தவறில்லை.
1. கழுதையும் குதிரையும் - கல்பற்றா நாராயணன்
https://akazhonline.com/?p=9033
2. பசுவய்யா கவிதைகள்:
--- கன்னியாகுமரியில் ---
சூரியாஸ்தமனத்தை
மறைத்தது ஒரு ஆட்டுக்குட்டி.
என்றும் மேகங்கள்
இன்று இது.
எனது கோணத்தை
சற்றே
நான் மாற்றிக் கொண்டால்
லாபம் ஒரு சூரியன்.
கோணமா?
சூரியனா?
சிந்தனையில் நழுவி,
வெளிப் பார்வை இழந்து
அறுபட்டு விழித்துக்
திடுக்கிட்டதும்,
நகர்ந்தோடியிருந்தது
அசட்டு ஆட்டுக்குட்டி
சூரியனைக் காணோம்.
(பிரக்ஞை, ஏப்ரல் 75)
--- கன்னியாகுமரியில் ---
இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்.
மிகப்பெரிய சூரியன்.
ஒரே ரத்தக் கலங்கல்.
எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி.
அசடு
அபேதம்
தன்னிலை அறியாதது.
இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா ?
மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்த தும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.
சூரியனைக் காணோம்.
(நடுநிசி நாய்கள், நவம்பர் 1975)
Comments
Post a Comment