எம் கோபாலகிருஷ்ணன் - ஆய்வும் புனைவும்
அறியப்பட்ட வரலாறு தகவல்களால் கட்டமைக்கப்பட்டது. சான்றுகள், குறிப்புகள், கடிதங்கள் போன்ற எண்ணற்ற ஆவணங்களில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களே நிலத்தின், மக்களின் வரலாறாக எழுதப்படுகின்றன. புனைவுகளும் அவ்வாறான தகவல்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. தொகுக்கப்பட்ட தகவல்களையும் ஆவணங்களையும் புனைவில் கையாள்வதில் உள்ள சவால்கள் என்ன? ஒரு ஆய்வேட்டையும், புனைவையும் வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சம் எது?
ஆய்வுக்கும் புனைவுக்குமான தொடர்பையும் வித்தியாசத்தையும் தமிழில் எழுதப்பட்ட சில நாவல்களின் அடிப்படையில் உரையாடுவதே இந்த அமர்வின் நோக்கம்.
Comments
Post a Comment