சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்
Saaranya's note:
தேவிபாரதி படைப்புகளில் வஞ்சம், பழி, சாபம் என்ற உணர்வுகள் அதீதமாக வெளிப்பட்டன. போதும் இந்த வஞ்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாப்பாத்திரங்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் வஞ்சத்தை சுமந்து அலைந்தனர். சொந்த வாழ்வை அழித்துக்கொண்டு தருணம் பார்த்துப் பழி தீர்த்துக் கொண்டனர். சிலர் மட்டுமே வஞ்சத்தை சுமந்து அலைய எல்லா காரணங்கள் இருந்தும் அதற்கு இரை ஆகாமல் இருந்தனர். மன்னிப்பு நோக்கி நகர்ந்தவர்கள் யார், நகர விரும்பாதவர்களை எது தடுத்தது, யார் எதை விட்டுச் சென்றார்கள் என்ற கோணத்தில் அமர்வில் பேசலாம்.
வாசிப்பு பகுதிகள்:
நொய்யல், நிழலின் தனிமை, நீர் வழிப்படூஉம், பிறகொரு இரவு ஆகியவற்றை வாசித்து இருந்தால் நல்லது. விவாதிக்க சில பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்,
நொய்யல் - குமரப்ப பண்டிதர்:
நாசுவ குடியில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே தன் குலத்தொழில் செய்ய விரும்பவில்லை. சிறுவயதில் ஒரு பயணத்தில் வழி தவறி மலைகளில் தங்கி இருந்த சித்தர் இடத்தில் ஜோதிடமும் மருத்துவமும் பயின்றவர். ஊருக்கு திரும்பி வந்து கோவிலில் பிச்சை எடுத்து அங்கு வருபவர்களுக்கு மருத்துவமும் ஜோதிடமும் பார்த்து வந்தார். ஒருநாள் அரண்மனையில் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது. ராஜா இவரை தன் நண்பருக்கு திருமண ஜாதகப் பொருத்தம் பார்க்க சொன்னார். பொருந்தவில்லை. சொன்னால் உயிர் போகும். அதை மறைக்காமல் சொன்னவருக்கு உயிர் மட்டும் உடம்பில் எஞ்சும்படி அடி உதை. பிறகு நிகழ்ந்த சில பகுதிகளை இணைத்து உள்ளேன்.
https://drive.google.com/file/d/1nzuK3VgWAoUrcCdrxa-T8guAoq-7m7eL/view?usp=drive_link
https://drive.google.com/file/d/1Dn0gwtNKZJJavOQe7MInVDLdzF1JvQ1D/view?usp=drive_link
அவ்வளவுக்கு பிறகும் ராஜா அவர் குறித்து சொன்னது
https://drive.google.com/file/d/1ozJ2rc2t4ldHs0G9JEk_DOwEiejFwzfw/view?usp=drive_link
வெள்ளியின் தந்தை பூபதி. வேம்பன கவுண்டர் மற்றும் சாமியாத்தாளின் மகன். சாமியாத்தாளுக்கு குமாரசாமியுடன் தொடர்பு. வேலம்மாள் பூபதியின் மனைவி, பாரு இவர்களின் மருமகள்.
சில பகுதிகள் குழப்பமாக இருந்தாலும் அங்கு நடப்பவற்றை ஓரளவு புரிந்து கொள்ள உதவும். இதன் தொடர்பை பின்னர் விவாதிக்கலாம்.
https://drive.google.com/file/d/1jEFwm2GlAi79R1q15R124FVnoNd6p5Tz/view?usp=drive_link
நிழலின் தனிமை:
தன் சகோதரியை சீர் குலைத்த கந்து வட்டிக்காரனை பல ஆண்டுகள் கழித்து பழி தீர்க்க நினைத்த இளைஞன், பல தருணங்களை தவற விட்டவன், மரண படுக்கையில் இருக்கும் பகைவனை கொள்ள தன்னை திரட்டிக் கொண்டு முன்னகரும் இடம்.
https://drive.google.com/file/d/1V0lhUu4Yz-x-RQBdAaKdL1SuXrydcl2h/view?usp=drive_link
Comments
Post a Comment