போகன் - Intellectual poetry.

கவிதை(Poetics) எப்போதும் அழகியலோடு(Aesthetics )தொடர்பு படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. அறிவை விட உணர்ச்சிக்கும்(emotions)உள்ளுணர்வுக்கும் (Intuition ) இடமாகவே கவிதை கருதப்பட்டு வந்திருக்கின்றது. பல நேரங்களில் கவிதை தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தாலும் ( கவிதை சரித்திரத்தை விட உயர்வானது ஏனெனில் சரித்திரம் குறிப்பிட்ட விஷயங்களை (particulars)பற்றி மட்டுமே பேசுகிறது கவிதையோ உலகளாவிய(universal )விஷயங்களைப் பேசுகிறது -அரிஸ்டாட்டில் ) கவிதை ஒருபோதும் அறிவை நோக்கியோ தத்துவத்தை நோக்கியோ செல்லும் ஒரு விஷயமாக கருதப்பட்டதில்லை. மனித அல்லது உலகாயத அறிவை எப்போதும் தீமையுடனும் சாத்தானுடனும் தொடர்புபடுத்தி சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த செமிட்டிக் மத மற்றும் கிறிஸ்தவ மரபின் வலுவான கரங்களின் பிடியில் நீண்ட காலமாக இலக்கியமும் கவிதையும் இருந்ததின் விளைவு இது. இந்த காலகட்டத்தில் கவிதை எப்போதும் கடவுளை நோக்கியும் நன்மையை நோக்கியும் அழகை நோக்கியும் அமைதியை நோக்கியுமே திரும்பி இருந்தது. கிரேக்க காவிய காலகட்டத்திற்குப் பிறகு வந்த தாந்தே, மில்டன் போன்றவர்கள் கவிதைக்குள் தத்துவத்தை கொண்டுவர முயன்றாலும் அது கிறிஸ்துவ இறை இயலாகதான் இருந்தது. இந்தச் சூழலில் ஐரோப்பா முழுவதும்  மதத்தின் பிடியிலிருந்து கலையும் தத்துவமும் தங்களை பலவந்தமாக விடுவித்துக் கொண்டு புத்தொளி இயக்கக் காலகட்டத்திற்குள் புகுந்தன. அப்போது கவிதையும் கவிஞனும் கூட புனர்ஜென்மம் எடுத்தார்கள். 


1) இந்தஇந்த காலகட்டத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவனான ஷெல்லி எழுதிய Hymn to intellectual beauty கவிதையை கவிதையின் இந்த புதிய திசை பற்றிய ஒரு பிரகடனமாகவே நாம் கொள்ளலாம்.

 அந்த வகையில் நாம் வாசிக்க வேண்டிய முதல் கவிதை இது.

https://www.poetryfoundation.org/poems/45123/hymn-to-intellectual-beauty


2)Metaphysical poetry என்று அழைக்கப்பட்ட 'வேதாந்தக் கவிதைகள்' இப்படி இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தை அடைந்தன. மனிதனுக்கும் கடவுளுக்கும் சொர்க்கத்துக்கும் இவ்வுலகத்துக்கும்  காதலுக்கும் மரணத்திற்கும் நடுவில் ஒரு இடம்.

இந்தகை கவிதைகளில் புகழ்பெற்றவர் John Donne.

 அவருடைய புகழ் பெற்ற கவிதை வரியான  'எந்த ஒரு மனிதனும் தீர்வு

 அல்ல. எந்த ஒரு மனிதனின் மரணமும் என்னை பின்னப் படுத்துகிறது ' வருகின்ற கவிதையை அடுத்த வாசிப்பாக கொள்ளலாம். இது உண்மையில் அறிவொளி காலகட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தின் கவிதையாகும். ஆனால் பின்னால் வருகின்ற அறிவின் யுகத்திற்கு கட்டியம் சொல்லக்கூடிய ஒரு கவிதை.

 இது இரண்டாவது வாசிப்புக்கான கவிதை.

https://allpoetry.com/No-man-is-an-island


3)முற்றிலும் முந்தையுக அழகியலிலிருந்து பிய்த்துக்கொண்டு  நவீன கவிதையையும் கவிதையில் நவீனத்துவத்தையும் தோற்றுவித்தவர் என்று டி எஸ் எலியட்டை சொல்லலாம். அவருடைய புகழ்பெற்ற  நீள் கவிதை பாழ் நிலம் 1948 இல் நோபல் பரிசு பெற்றது.

 ஆனால் அது 400க்கும் மேற்பட்ட வரிகள் கொண்டது.

 நாம் இங்கே அவருடைய ' உள்ளீடற்ற மனிதர்கள்' என்ற சிறிய கவிதையை வாசிக்கலாம். இது முற்றிலும் மனிதனின் அறிவு இயங்கும் தளத்திலேயே இயங்குவது. வாக்களிக்கப்பட்ட கடவுளின் அரசாங்கங்களிடம்  அவநம்பிக்கையை சந்தேகத்தை வெளிப்படுத்துவது.

https://allpoetry.com/the-hollow-men


4)தமிழில் அறிவு ஜீவி கவிஞராக அறியப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரம்மராஜன். இவருடைய கவிதைகளில் உணர்வை விட பெரும்பாலும் இவருடைய அறிவே முன்  வந்து நிற்பதைக் காணலாம்.

 உதாரணத்துக்கு அறிந்த நிரந்தரம் என்கிற இவரது இந்தக் கவிதை 


அறிந்த நிரந்தரம்


ரேடியம் முட்களெனச் சுடர் விடுகிறது விழிப்பு

இரவென்னும் கருப்புச் சூரியன்

வழிக்குகையில் எங்கோசிக்கித் தவிக்கிறது

நெட்டித் தள்ளியும் நகராத காலம்

எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்

உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்

கேட்காமல் மறதியில் கரைகிறது

இதோ வந்தது முடிவென்ற

சாமச் சேவலின் கூவல்

ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக


5) சமகாலத்தில் அறிவார்த்த கவிதைகளையும் எழுதி வருகிறவர்களின் முக்கியமானவராக சபரி நாதனை சொல்லலாம்.

அவருடைய இந்த கவிதையை நாம் வாசித்துப் பார்க்கலாம் 


காளிங்கரின் கடிதம் எங்கள் அலுவலகத்திற்கு தகவல் உள்ளீடு செய்பவர் தேவைப்பட்டார்.

விளம்பரம் கொடுத்தோம், சுவரொட்டிகள் ஒட்டினோம்.

மறுநாள் காலை இளமான் ஒன்று

வரவேற்பறையில் காத்திருந்தது. அதன் வாயில்

ஒரு சிபாரிசுக்கடிதம்

காளிங்கர் என்ற புகழ்பெற்ற ஓநாயிடம் இருந்து

‘இவரது அன்னையாரை எனக்குத் தெரியும்

மிருதுவானவர், பழகுதற்கு இனிமையான நல்ல நண்பர்

Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

கடலூர் சீனு - பயண இலக்கியம்

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்