சிவ கிஷோர் - கற்பதிந்த இலக்கியங்கள்
கலைப் படைப்புகளுக்கு முக்கிய சவாலாக இருப்பது காலம். காலத்தை வெல்லும் படைப்புகளே சிறந்த கலையமைதி கொண்டவை. அல்லது சிறந்த கலையமைதி கொண்டதனாலேயே அவை காலத்தை வெல்கின்றன. ஆனால் படைக்கும் போதே காலத்தைக் கடக்கும் உத்தரவாதம் கொண்டவை கற்கள் கொண்டு படைக்கப்படும் கலைகள். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிற்பங்கள். அதேசமயம் எழுத்துக்களையும் கல்லில் பொறிக்கும் வழக்கம் நடுகற்கள் நிறுவும் காலம் தொட்டே இருந்து வருகிறது. செய்திகளையும் ஆணைகளையும் வெகு காலம் நிலைக்கச் செய்ய உருவான இக்கல்வெட்டு முறைமை, குடைவரை கோவில் அமைக்கத் தொடங்கிய போதே கவிதைகளாகவும் வெளிப்படத் தொடங்கியது. இதன் சிறப்பம்சம் என்பது அனைத்து பாடல்களும் ஒரு வராலற்று உண்மையைத் தொட்டு நிற்பவை (சிராமலை அந்தாதி தவிர). வரலாற்றை அறிய துணைபுரியும் அத்தகைய கல்வெட்டுகளிலிருந்து இலக்கிய அம்சத்தை ரசிக்கும் முயற்சியாக இவ்வமர்வு அமையும்.
Comments
Post a Comment